• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப். 2ம் தேதி அதிமுக உண்ணாவிரதம் – ஓ.பி.எஸ்

March 30, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின்  70-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, 120  ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திருமண விழாவை நடத்தி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

“தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரியின் உரிமையை அதிமுக ஒரு நாளும் விட்டுக் கொடுக்காது.அதிமுகவின் அறப்போராட்டத்தில் மக்கள் பங்கேற்று வெற்றி பெற செய்ய வேண்டும்.அதிமுகவின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்”.என்றார்.

மேலும் படிக்க