• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கணவரின் படத்தை தயாரிக்கும் நடிகை நஸ்ரியா

March 28, 2018 தண்டோரா குழு

மலையாளத்தில் பல படங்கள் நடித்த நடிகை நஸ்ரியா நேரம் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார்.

இப்படத்திற்குப் பிறகு ஆர்யாவுடன் ‘ராஜா ராணி’, தனுஷுடன் ‘நையாண்டி’, போன்ற சில படங்களில் நடித்து வந்த இவர் மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பஹத் பாசிலைத் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவர் எந்த படங்களில் நடிக்கவில்லை.இதனைத் தொடர்ந்து சிறிய இடைவெளிக்குப் பிறகு அஞ்சலி மேனன் இயக்கத்தில் நஸ்ரியா நடிப்பதாக கூறப்பட்டது.அவருடன் இணைந்து பிருத்வி ராஜ் மற்றும் பார்வதி ஆகியோரும் நடிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில்,  தனது கணவர் பஹத் பாசில் நடிக்கும் ‘அயுபிண்டே புத்தகம்’ படத்தைத் தயாரிக்கிறார் நஸ்ரியா. அமல் நீரத் இயக்கும் இந்தப் படத்தில், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க