• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘எந்திரன்’ பட வாய்ப்பை தவற விட்ட நடிகர் அஜீத்!

March 28, 2018 tamilsamayam.com

ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘எந்திரன்’ பட வாய்ப்பு முதலில் நடிகர் அஜீத்துக்குத்தான் வந்ததாம்.

நடிகர் அஜீத் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் நாம் சொல்ல வேண்டியதில்லை. இந்த நிலையில் சில வருடங்களுக்கு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் திரைக்கு வந்து மெகா ஹிட்டான படம் ‘எந்திரன்’. இந்தப் படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 100 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. மேலும் நடிகர் ரஜினிக்கு வட இந்தியாவில் மிகப்பெரும் மார்க்கெட்டை உருவாக்கித் தந்தது இந்தப் படம்.

ஆனால், இந்தப் படத்தின் கதையை நடிகர்கள் அஜீத், ஷாருக்கான் ஆகியோரிடம்தான் இயக்குனர் ஷங்கர் கூறினாராம். ஷாருக்கான் கதையில் சில மாற்ற செய்யச் சொன்னதால் ஷங்கர் அவரை நிராகரித்து விட்டாம். அதே நேரத்தில் அஜீத் ஏன் இந்த படத்தில் நடிக்க மறுத்தார் என்று தெரியவில்லை, அப்படி நடித்திருந்தால் அஜீத் இன்று இந்தியா முழுவதும் தெரிந்த ஒரு நடிகராக ஜொலித்திருப்பார்.

மேலும் படிக்க