• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீண்ட நாள் காதலரை மணக்கிறார் சோனம் கபூர் !

March 24, 2018 தண்டோரா குழு

பிரபல பாலிவுட் நடிகர் அணில் கபூரின் மகள் சோனம் கபூர். இவர் ‘சாவரியா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக ஹிந்தியில் அறிமுகமானார்.

அதன்பின், ‘டெல்லி-6, ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், மௌசம், ராஞ்சனா, நீர்ஜா, பிரேம் ரதன் தன் பாயோ’ போன்ற பல படங்களில் சோனம் கபூர் நடித்தார். இதில், ராஞ்சனா படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.  கடைசியாக  அக்சய் குமாருடன் இணைந்து ‘பேட்மேன் படத்தில் நடித்தார்.சோனம் கபூர் கைவசம் ‘ஏக் லடுகி கோ தேகா தூ ஐசா லகா, சஞ்சு, சோயா ஃபேக்டர், வீரே டி வெட்டிங்’ ஆகிய 4 படங்கள் உள்ளது.

இந்நிலையில், சோனம் கபூருக்கும் அவரது நீண்ட நாள் காதலரான ஆனந்த் அஹுஜாவிற்கும் வருகிற மே 12-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் ஜெனிவா நாட்டில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

மேலும் படிக்க