• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் முதலமைச்சருக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்?

March 24, 2018 cineulagam.com

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தளபதி 62. சாமி 2, சண்டக்கோழி 2 என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் அவர் தான் நடிக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் நேற்று தான் முடிவடைந்தது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் ஒய்.எஸ்.ஆரின் மருமகளாக நடிக்கவுள்ளார் – அதாவது ஜகன் மோகன் ரெட்டியின் மனைவியான ஒய்.எஸ்.பாரதி வேடத்தில் தான் அவர் நடிக்கவுள்ளார்.

யாத்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ராஜசேகர ரெட்டியாக மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க