• Download mobile app
11 Mar 2026, WednesdayEdition - 3682
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்துதர முடியாதா? மத்திய அரசுக்கு கமல் கேள்வி

March 22, 2018 தண்டோரா குழு

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்துதர முடியாதா? இது இயலாமை அல்லஇழிவான அரசியல் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையிலும் காவிரி மேலாண்மை அமைப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைபோல் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற வாளகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மைய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,     

பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதிநீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்துதர முடியாதா? இது இயலாமை அல்ல; இழிவான அரசியல் . கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க