• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நரிக்குறவர் மக்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

March 22, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட நரிகுறவர்கள்,நரிக்குறவர் மக்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி இன்று(மார்ச் 22) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் சாலை ஓரங்களில் வியாபாரம் செய்யும் நரிகுறவர் மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன் அவர்களை போலீசார் சாலைகளில் வியாபாரம் செய்யக்கூடாது என மிரட்டுவதாகவும்,தாங்கள் வசித்து வந்த பகுதியில் இருந்து உடனடியாக காலி செய்ய வலியுறுத்தி போலீசார் மிரட்டுவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாட்டையால் அடித்தும் கைகளை பிளேடால் கீறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும்,கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது தங்களை வணிக  வளாகங்களில்  வியாபாரம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என வலியுறுத்தி சாட்டையால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நரிகுறவர் மக்களை,பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்,மத்திய அரசு அறிவித்த இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்,வேலை வாய்ப்புகளில்  முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மேலும் படிக்க