• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகைகள் குறித்து டுவிட்டரில் சர்ச்சை கருத்து தெரிவித்த ஞானவேல் ராஜாவின் மனைவி

March 21, 2018 தண்டோரா குழு

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா அண்மையில் ட்விட்டர் பக்கத்தில் செய்த பதிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேஹா தனது ட்விட்டர் பக்கத்தில்,”சில நடிகைகள் குடும்பத்தை உடைப்பவர்கள். இவர்கள் பாலியல் தொழில் செய்வதை விட மோசமானவர்கள்.இதை பொதுவாக சொல்லவில்லை. இது ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும்.சில நடிகைகள் திருமணம் ஆனவர்களை தான் குறி வைக்கிறார்கள்.இம்மாதிரியான நடிகைகளின் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.இதையடுத்து, பலரும் அவர் கணவருக்கு இது நடந்ததா என்று கேள்வி எழுப்ப⁉,அந்த பதிவை ட்விட்டரில் இருந்து நீக்கிவிட்டார்.

பின்னர் அதற்கு விளக்கமளித்த நேஹா, தான் பதிவிட்டது தன்னுடைய பிரச்சினை இல்லை என்றும் அவர் கணவருடன் எந்த விதமான குழப்பமும் இல்லை.ஆனால்,என்னை சுற்றி நடக்கும் ஒரு சில விஷயங்களை என்னை பாதித்துள்ளது.ஒரு சில நடிகைகள் திருமணமான ஆண்களின் வாழ்க்கையில் விளையாடி அந்த குடும்பத்தின் அமைதியை குழைத்து விடுகின்றனர்”என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க