• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீக்குளிக்க முயன்ற காவலர்கள் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை – தேனி மாவட்ட எஸ்.பி

March 21, 2018 தண்டோரா குழு

மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற காவலர்கள் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என தேனி மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் கூறியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் ஆயுதப் படைப் பிரிவில் பணியாற்றிவரும் ரகு, கணேஷ் என்ற இரு காவலர்கள் டி.ஜி.பி அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் திடீரென தங்கள் கையில் வைத்திருந்த மண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.அப்போது, டி.ஜி.பி அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சக காவலர்கள் அவர்களை தடுத்தனர்.

மேலும், ஜாதி ரீதியாக பாகுபாடு பார்ப்பதாக தேனி மாவட்ட எஸ்பி மற்றும் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மீது காவலர்கள் இருவர் குற்றம்சாற்றியுள்ளார்.இந்நிலையில், இது தொடர்பாக தேனி மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது,

காவலர் கணேஷின் நடவடிக்கைகள் தொடர்ந்து சரியில்லை.பணியை சரியாக மேற்கொள்ளாததால் உயர்அதிகாரிகள் அளித்த அறிக்கையின் படி அவரை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தோம்.அதே போன்று ரகு என்ற காவலரை அவசர காலங்களில் பணிக்கு அழைத்தால் அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிடுவார். அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இருவருமே சரியாக பணியை மேற்கொள்ளவில்லை என்பதால் இடமாற்றம் செய்யப்பட்டனர்.எனவே இன்று அவர்கள் நடந்து கொண்ட சம்பவத்தால் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க