• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து தபெதிக,திவிக அமைப்பினர் போராட்டம்

March 20, 2018 தண்டோரா குழு

புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட்ட தபெதிக,திவிக அமைப்பினர் 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும், நெல்லையில் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்தும் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.வி.க, தமிழ்புலிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தீடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது புதுக்கோட்டையில் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும்,ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டதற்கு கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

மதக்கலவரத்தை தூண்ட நினைக்கும் இந்து அமைப்பினரையும், பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவையும் கைது செய்ய வேண்டும் எனவும் மறியல் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.மேலும் ரதயாத்திரையை தடுக்காத மாநில அரசையும் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பிய அவர்கள்,பெரியாரின் சிலையை உடைத்தவர்களை தமிழக அரசு கைது செய்து வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.இதனையடுத்து  சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க