• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘தளபதி 62’ படத்திற்கு சிறப்பு அனுமதி ஏன்?தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்

March 20, 2018 தண்டோரா குழு

கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் சில கோரிக்கைகளை முன் வைத்து திரைப்பட பணிகளை நிறுத்துமாறு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.இதனால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்தானது.ஆனால் விஜய்யின் 62வது படம், நாடோடிகள்-2 மற்றும் சில படங்களின் படப்பிடிப்பு இன்றும் நடந்து வருகிறது.

இதனால் திரைத்துறைக்குள்ளே பல பிரச்சனைகள் எழுந்து வருகிறது.வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு மட்டும் தயாரிப்பாளர் சங்கம் அனுமதி கொடுத்துள்ளதற்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்பொழுது அதிகாரப்பூர்வ விளக்கம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, “விஜய் 62வது படத்தில் ஹைதராபாத்தில் இருந்து 2 ஸ்டண்ட் மாஸ்டர்கள் வந்துள்ளார்களாம்.இருவருக்கும் அடுத்தடுத்து பட வேலைகள் இருப்பதால் அவர்களுக்காக படப்பிடிப்பு நடக்கிறது. நாடோடிகள் படப்பிடிப்பு வெளியூரில் எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் அவர்கள் எடுக்கிறார்களாம்.

அதேபோல் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வர பாதியில் உடனே நிறுத்த முடியாத காரணத்தால் அவர்களது படப்பிடிப்பு நடக்கிறது” என்று கூறியுள்ளது. இவர்கள் அனைவருமே முறையான அனுமதியை தயாரிப்பாளர் சங்கத்திடம் பெற்ற பின்னரே படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க