• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரத யாத்திரைக்கு அனுமதியளித்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியினர் கைது

March 20, 2018 தண்டோரா குழு

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நடத்தப்படும் ரத யாத்திரைக்கு அனுமதியளித்ததை கண்டித்து கோவையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியினரை காவல் துறையினர் இன்று(மார்ச் 20)கைது செய்தனர்

அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நாடு தழுவிய ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.ஆறு மாநிலங்களை கடந்து இன்று காலை கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் வந்துள்ளது.

இந்நிலையில் ரத யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில் கோவை உக்கடம் பகுதியில் மனித நேய ஜனநாயக கட்சியினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது 150 க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கிம் எதிராக கோஷங்கள் எழுப்பியபடியே உக்கடம் பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.இதையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

மேலும் படிக்க