• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி

March 12, 2018 தண்டோரா குழு

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் டிரக்கிங் சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இதையடுத்து, காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், தீவிபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைபோல், காட்டுத்தீயில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் படிக்க