• Download mobile app
14 Apr 2026, TuesdayEdition - 3716
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுவையான சில்லி பிரெட் ரெசிபி.!

May 28, 2018 tamilsamayam.com

பிரெட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரெட்டில் சுவையான ரெசிபிகளை உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை அசத்தலாம். அந்தவகையில் பார்த்தவுடன் ருசிக்கத் தோன்றும் சுவையான, ருசியான சில்லி ப்ரெட் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க.!

சமைக்க தேவையான பொருட்கள்;

ப்ரெட் ஸ்லைஸ் – 10,
தக்காளி சாஸ் – ஒரு தேக்கரண்டி,
சிவப்பு கேசரி கலர் – சிறிதளவு, கொத்தமல்லி இலை – அரை கப்,
எலுமிச்சை ஜுஸ் – சிறிதளவு,
கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி,
வெங்காயம் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது),
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது),
கீறிய பச்சை மிளகாய் – 3,
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி,
நெய் – ஒரு தேக்கரண்டி,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு

செய்முறை.!

முதலில் ப்ரெட்’ஐ எடுத்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.பின் வாணலியில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை வறுத்துக் கொள்ளவேண்டும்.பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும்.பிறகு தக்காளி சாஸ், சிவப்பு கேசரி கலர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.பின்னர் வறுத்த ப்ரெட் துண்டுகள், உப்பு போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.பரிமாறும் முன் கொத்தமல்லி இலை, எலுமிச்சை ஜுஸ், சிறிது வெங்காயம் சேர்க்கவும்.சுவையான, காரமான குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பிரெட் தயார்.

மேலும் படிக்க