• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விசுவாசம் படத்தில் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அஜித்!

March 3, 2018 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள படம்  ‘விசுவாசம்’.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்துடன் நான்காவது முறையாக இணையவுள்ள இந்த படம் ஒரு திகில் படம் என்று கூறப்படுகிறது.

அப்படியெனில், அஜித் நடிக்கும் முதல் திகில் படம் இதுதான். ஏனெனில் அஜித் இதுவரை ரொமான்ஸ் மற்றும் ஆக்சன் படங்களில் மட்டுமே அஜித் நடித்துள்ளார் என்பது குறிப்பித்தக்கது.

எனினும் , நயன்தாரா இதற்கு முன்னர் மாயா மற்றும் டோரா ஆகிய இரண்டு திகில் படங்களில் நடித்துள்ளாதால் ‘விசுவாசம்’ அவருக்கு 3வது திகில் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னையில் உள்ள முன்னணி ஸ்டுடியோ ஒன்றில் செட் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணியில் இயக்குனர் சிவா ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க