• Download mobile app
26 May 2026, TuesdayEdition - 3758
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை ஸ்ரேயாவுக்கு மார்ச் 17ல் திருமணம்!

March 1, 2018 tamilsamayam.com

பிரபல நடிகை ஸ்ரேயாவுக்கு மார்ச் 17ம் தேதி இந்து மத முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து ‘மழை’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘சிவாஜி’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தார். சில வருடங்களுக்குப் பிறகு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் சிம்பு ஜோடியாக ஸ்ரேயா நடித்தார், தற்போது ‘நரகாசூரன்’ படத்தில் அரவிந்த் சாமி ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ரேயா.

இந்நிலையில், மார்ச் 17ஆம் தேதி ஸ்ரேயாவுக்குத் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரி கெசேவ்வைத் திருமணம் செய்ய இருக்கிறார் ஸ்ரேயா. இவர்களது திருமணம் உதய்ப்பூரில் நடக்க இருக்கிறது. மார்ச் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு இந்து முறைப்படி இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது.

மேலும் படிக்க