• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துருவங்கள் 16 பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க விருப்பமா?

February 21, 2018 cinepettai.com

துருவங்கள் 16 படத்தின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் கார்த்திக் நரேன். இவரின் அடுத்த படம் நரகாசூரன். இதனை தயாரிப்பது கவுதம் மேனன். படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றது.

இந்நிலையில் அவரின் அடுத்த பட அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது வரை எடுத்த இரண்டு படங்களும் திரில்லர் ஜானரில் எடுத்தவர் தன் மூன்றாவது படத்தில் இந்த பாணியில் இருந்து விலகுகிறார்.

`நாடக மேடை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2018 இன் பாதியில் தொடங்குமாம். ” மேலும் இப்படம் மிருதுவான, யதார்த்தமான படமாம். இன்றைய நவநாககரிக்க சமுதாயத்தை. வெவ்வேறு கருத்துகள் கொண்ட இளைஞர்களின் பார்வையில், சித்தரிக்கும் படமாக இருக்கும்” என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் கார்த்திக் நரேன்.

இவரது தந்தையின் `நைட் நாஸ்டால்ஜியா ஃப்ளிமோடைன்மென்ட்’ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் இவர் தன் ட்விட்டரில் பக்கத்தில் ” நாடக மேடை படத்தில் நடிக்க மற்றும் , உதவியாளராக பணியாற்ற ஆண் மற்றும் பெண்கள் தேவை ( 18 – 30 ) என்றும். விருப்பம் உள்ளவர்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் போர்ட் போலியோ / பயோ டாட்டாவை அனுப்புமாறும் கூறியுள்ளார்.”

மேலும் படிக்க