• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பு

February 12, 2018 தண்டோரா குழு

தமிழக சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த ஜெயலலிதாவை கவரவிக்கும் விதமாக அவரின் உருவ படத்தை சட்டப்பேரவையில் திறக்க உள்ளதாக தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. இதையடுத்து,படத்திறப்பு விழா இன்று (பிப்.,12) சட்டசபை வளாகத்தில் நடந்தது.

சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட 7 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட ஜெ.,வின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் திறந்து வைத்தார்.

இந்த விழாவை ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்துள்ளனர். திமுக கூட்டணி கட்சியான காங்.,ம் இந்த விழாவை புறக்கணித்துள்ளது.அதைப்போல்  சுற்றுப்பயணத்தில் இருப்பதால் சுயேட்சை எம்எல்ஏ தினகரனும் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இதற்கிடையில், திமுக இவ்விழாவை புறக்கணித்ததால், திமுக எம்.எல்.ஏ.,க்களின் இருக்கைகள் அதிமுக எம்.பி.,க்கள் , நீதிபதிகள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோருக்கும் திமுக எம்.எல்.ஏ.,க்களின் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே தமிழக சட்டசபையில் ராஜாஜி, காமராஜர், அண்ணா, பெரியார் உள்ளிட்ட 10 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது. தற்போது 11வது படமாக ஜெ., படம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க