• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பகத் பாசில் இடத்தை பிடித்த அருண் விஜய் !

February 9, 2018 தண்டோரா குழு

கார்த்தியின் ‘காற்று வெளியிடை’ படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் புதிய படத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பகத் பாசில், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளார்கள்.

இதற்கிடையில், பகத் பாசில் இப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இப்படத்திற்கு ‘செக்கச்சிவந்த வானம்’ என தலைப்பு வைக்கபட்டுள்ளது.

போஸ்டரில் சிம்பு, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோரது புகைப்படங்கள் மட்டுமே இருந்தது. இதில் பகத் பாசில் புகைப்படம் எதுவும் இடம் பெறவில்லை. இதனால், பகத் பாசில் இப்படத்தில் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளார் என்பது உறுதியானது.

இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார்.
இப்படத்தை இயக்குநர் மணிரத்னமின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. வெகு விரைவில் படத்தின் ஷூட்டிங்கை துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க