• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘பேரன்பு’ சாதனையை 1995லே மம்முட்டியின் ‘விதேயன்’ படம் சாதித்தது!

February 8, 2018 tamilsamayam.com

இயக்குனர் ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள படம் ‘பேரன்பு’. இந்தப் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

சிறந்த ஆசிய படத்துக்கு வழங்கப்படும் விருதுக்கான போட்டியில் கலந்து கொண்ட 187 உலக திரைப்படங்களிலிருந்து ‘பேரன்பு’க்கு 20வது இடம் கிடைத்துள்ளது.

ஆனால் சுமார் 23 வருடங்களுக்கு முன்பே, அதாவது 1995ம் ஆண்டு மம்முட்டி படம், இதேபோல ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டது.

இந்த உண்மை பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் மம்முட்டி நடித்த படம் ‘விதேயன்’.

இந்தப் படம் 1994ல் வெளியானது. 1995ல் ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முறையாக சிறந்த ஆசிய படத்துக்கான விருது பிரிவு துவக்கப்பட்டிருந்த நிலையில், மம்முட்டியின் ‘விதேயன்’ படத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க