• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீண்டநாள் காதலரை மணந்தார் நடிகை பாவனா!

January 22, 2018 tamilsamayam.com

தனது நீண்ட நாள் காதலரான தயாரிப்பாளர் நவீனை கேரளாவின் திருச்சூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா திருக்கோவிலில் நடிகை பாவனா கரம்பிடித்தார்.

பிரபல நடிகை பாவனா கன்னட பட தயாரிப்பாளர் நவீனை காதலித்து வந்தார். அவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேரளாவில் நிச்சயதார்த்தம் நடந்தது.

நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு நடிகை மஞ்சு வாரியர் உள்பட 16 பேரை மட்டுமே அழைத்திருந்தனர். ஐந்து ஆண்டுகளாக காதலித்து வரும் நவீன், பாவனா சில காரணங்களால் திருமணத்தை தள்ளிப் போட வேண்டியதாகிவிட்டது.

இந்நிலையில் கேரளாவின் திருச்சூரில் உள்ள திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணா திருக்கோவிலில் நடிகை பாவனா, நவீன் திருமணம் இந்து முறைப்படி நடந்தது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை லூலு கன்வென்ஷன் ஹாலில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க