• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடப்பாண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசாணை வெளியிடவில்லையா? – தமிழக அரசு பதில்

January 18, 2018 தண்டோரா குழு

நடப்பாண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு ஜனவரி 12 ஆம் தேதி அரசிதழில் பிறப்பித்துள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றகிளை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வெளியிடப்பட்ட அரசாணையில் 2017ம் ஆண்டுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் 2018ம் ஆண்டுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடாத நிலையில் மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக கருதலாம் எனவும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஏன் தடை விதிக்க கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில், நடப்பாண்டு ஜல்லிக்கட்டு போட்டியை ஜன.14 முதல் ஜன.31க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று ஜன.12ல் வெளியிடப்பட்ட அரசாணையை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

மேலும், தமிழகத்தில் இந்த ஆண்டு 84 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க