• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விக்னேஷ் சிவனுடன் இணையும் சிவகார்த்திகேயன் !

January 9, 2018 தண்டோரா குழு

மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் படித்தவர் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது பேசிய அவர், வேலைக்காரன் படம் இந்த அளவிற்கு வெற்றி பெரும் என்று நான் எதிர்பாக்கவில்லை. கல்லூரிக்கு விழாவிற்கு வந்தது மகிழ்ச்சி. இங்கு வந்தது என் கல்லூரி நாட்களை நினைவுபடுத்துகிறது.

நான் விக்னேஷ்சிவனிடம் நான் கல்லூரி வாழ்க்கை குறித்து படம் எடுக்க வேண்டும் எனக் கூறினேன். அவர் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பின் இது குறித்து நாம் கண்டிப்பாக பேசுவோம் என்றார். எனவே விரைவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நான் ஒரு படம் நடிப்பேன் என்றார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சிவகார்த்திகேயன் பேசினார்,

விஜய், அஜித் போன்றோரே அறிவியல் தொடர்பான கதையில் நடிக்க யோசிக்கும் போது நீங்கள் எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் ?

விரைவில் அறிவியில் சார்ந்த ஒரு படத்தில் நடிக்கவுள்ளேன். அஜித் விஜய் போன்றோர் ஸ்டைல் வேறு. ஆனால் நடிக்கவுள்ள படம் எல்லோருக்கு எளிதில் புரியக்கூடிய படமாகவும் ரசிக்க கூடியதாகவும் இருக்கும்.

உங்களுக்கு போட்டி யார் என்று நினைகிறீர்கள் ?

எனக்கு போட்டியாக நான் யாரையும் நினைக்கவில்லை. என்னுடைய படம் தான் எனக்கு போட்டி. ரோமோ படத்தின் வசூலை வேலைக்காரன் படம் முறியடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அது நடந்தது இனி வேலைக்காரன் படத்தின் சாதனையை என்னுடைய அடுத்த படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

உங்கள் அடுத்த படத்தை எப்போது எதிர்பார்க்கலாம் ?

சம்மருக்கு தலைவரின் 2.0 படம் வெளியாகிறது. அதன் பின் நான் நடித்த ஆக்சன், என்டர்டெய்ன்மென்ட் படம் வெளியாகவுள்ளது.

ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து உங்கள் கருத்து?

அரசியல் என்பது பொதுவானது. எல்லோரும் அரசியலுக்கு வரலாம்.

மேலும் படிக்க