• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் காங்கிரஸ் தலைவர் வசந்த் தாவ்கரே மறைவு

January 5, 2018 தண்டோரா குழு

மகாராஷ்டிராவின் முன்னாள் சட்டமன்ற பேரவை தலைவர், வசந்த் தாவ்கரே(68) உடல்நலக்குறைவால் நேற்று(ஜன 4)காலமானார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசிய காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர் மற்றும் முன்னாள் சட்டபேரவை தலைவராக விளங்கியவர் வசந்த் தாவ்கரே.அவர் கடந்த சில நாட்களாக
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, மும்பை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.ஆனால், சிகிச்சை பலனின்றி, நேற்று(ஜன 4),காலமானார்.

கடந்த 1986ம் ஆண்டு, மும்பை நகரில் உள்ள தானே நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கடந்த 1987ம் ஆண்டு, தானே நகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாராஷ்டிரா சட்டமன்ற கவுன்சிலின் ஐந்து ஆண்டு கால உறுப்பினராகவும், பல ஆண்டுகளாக அதன் துணை தலைவராகவும் பணியாற்றினார்.

வசந்த் தாவ்கரேவின் இறுதி சடங்குகள் தானே நகரில் இன்று நடைபெறுகிறது.அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை வைக்கப்பட்டு,பிறகு சுமார் 3 மணி அளவில், அவருடைய உடல் தகனம் செய்யப்படும் என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க