• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியின் கட்சியில் இணைந்த முக்கிய பிரபலம்!

January 3, 2018 தண்டோரா குழு

லைகா நிறுவனத்தின் தென்னிந்திய செயல் பிரிவு அதிகாரியாக செயல்பட்டு வந்த ராஜு மகாலிங்கம் ரஜினி தொடங்கவுள்ள புதிய கட்சியில் இணைந்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேச அறிவிப்பு தமிழகத்தின் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் லைகா நிறுவனத்தின் தென்னிந்திய செயல் பிரிவு தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வந்த ராஜு மகாலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு,சூப்பர் ஸ்டாருடன் இணைந்து அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜு மகாலிங்கம் கூறுகையில்,

2.0 படப்பிடிப்பின்போது ரஜினியை நான் நெருக்கமாக கவனித்தேன். அவரது கடமை உணர்வு, நேர்மை, அர்ப்பணிப்பு என்னை அவரது கட்சியில் ஈர்த்துள்ளது.மேலும்,கட்சியில் நான் தற்போது எந்தப் பொறுப்பிலும் இல்லை. உறுப்பினராக சேர்ந்து உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க