• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பத்மாவதி படத்திற்கு கண்டிஷன் போட்ட தணிக்கை குழு

December 30, 2017 தண்டோரா குழு

இயக்குநர் சஞ்செய் லீலா பன்சாலி இயக்கத்தில் ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் பத்மாவதி.
இந்த படத்தில் தீபிகா படுகோனே பத்மினி வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்துள்ளனர்.படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால்,ராணி பத்மினியின் சிறப்பை சீர் குலைக்கும் வகையில் படம் தயாரிக்கப்பட்டு இருப்பதாக கூறி இந்தியா முழுவதும் இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.

கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, குஜராத் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் படத்திற்கு தடைவிதித்தன. இதுமட்டுமின்றி படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க கூடாது எனவும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், பத்மாவதி படத்திற்கு சிபிஎப்சி எனப்படும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகவும் படத்தில் ஏறக்குறைய 26 காட்சிகளை நீக்க வேண்டும் என்று சிபிஎப்சி தெரிவித்துள்ளதாகவும் படத்தின் பெயர் ”பத்மாவத்” என மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் படத்தில் மேற்கொள்ளப்பட்ட பிறகு, படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க