• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனாவில் டிரம்பின் முகஅமைப்பில் உருவாக்கப்பட்ட நாய் பொம்மை

December 30, 2017 தண்டோரா குழு

சீனாவில் வணிக வளாகத்தின் முன்,அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்பின் முக வடிவம் கொண்ட நாய் பொம்மை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சீனாவில் விலங்குகள் பெயரில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதோடு விலங்குகள் பெயரில் ராசிபலனும் உண்டு. அவ்வகையில், வரும் 2018ம் ஆண்டு, நாயை மையமாக கொண்ட ஆண்டு ஆகும்.

இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக, சீனாவில் உள்ள வணிக வளாகத்தில் அமெரிக்க நாட்டின் குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்பின் முகவடிவம் மற்றும் ஆள்காட்டி விரல் தூக்கி வைத்திருப்பது போன்று ராட்ச நாய் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1946ம் ஆண்டு அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப் பிறந்தார். அவர் பிறந்த ஆண்டானது, நாய் ராசியில் பிறந்த ஆண்டு ஆகும். அமெரிக்க நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர்களால் இருந்த ஜார்ஜ் புஷ் மற்றும் பில் கிளின்டன் ஆகியோரும் இந்த நாய் ராசியை கொண்டவர்கள்.

சீனாவில் ராசி பலன்களின்படி, நாய் ராசியை கொண்டவர்கள், மிகவும் வெளிப்படையானவர்கள், மிகவும் விசுவாசம் உள்ளவர்கள் மற்றும் நீதிக்காக வலுவான உணர்வு கொண்டவர்கள். அதே சமயத்தில், அவர்கள் பிடிவாதம், எளிதில் கோபம் அடைபவர்கள் மற்றும் எரிச்சல் தரும் குணம் உடையவர்கள்.

மேலும் படிக்க