• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

107 வயது மூதாட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ராகுல் காந்தி

December 26, 2017 தண்டோரா குழு

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, 107 வயது மூதாட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து
கூறியுள்ளார்.

பெங்களூரை சேர்ந்த தீபாலி சிக்கந்த் என்ற பெண் தமது பாட்டிக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று 107-வது பிறந்த நாள் என்றும், அவருக்கு ராகுல் காந்தியைப் பார்க்க வேண்டும் என விருப்பம் என்றும் கூறி,தனது பாட்டி பிறந்தநாள் கேக் வெட்டும் புகைப்படத்தையும்,ராகுல் காந்தியின் டிவிட்டர் பக்கத்தை இணைத்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தீபாலியின் ட்விட்டர் பதிவை கண்ட ராகுல் காந்தி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.அந்த பாட்டிக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் தமது சார்பில் அழகான பாட்டிக்கு அரவணைப்பை வழங்குமாறு தீபாலியிடம் கேட்டுக் கொண்டார்.

மேலும்,காங்கிரஸ் கட்சியின் தலைவர் தீபாலியின் பாட்டியிடம் தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு, தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க