• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா வீடியோ வெளியீடு வெற்றிவேல் மீது வழக்கு பதிவு

December 20, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் இன்று வெளியிட்டார். ஆர்.கே.இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாக தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீண்நாயர் புகார் அளித்தார்.

இதனையடுத்து, வீடியோ வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு தொடரப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளார். மேலும் வீடியோவை வெளியிட்ட ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் லக்கானி பேட்டி அளித்துள்ளார்.

மேலும் படிக்க