• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானிக்கு பா.ரஞ்சித் வாழ்த்து

December 18, 2017 தண்டோரா குழு

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜிக்னேஷ் மேவானிக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு பெற்ற தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானிவட்காம் தொகுதியில் போட்டியிட்டார். சுயேச்சையாக போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி 84,785 வாக்குகள் பெற்று வென்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் சக்கரவர்த்தி விஜயகுமார் 65,946 வாக்குகளே பெற்றுள்ளார்.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானிக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாழ்த்துகள் தோழர் ஜிக்னேஷ் மேவானி. தங்கள் வெற்றி பாசிஸத்துக்கு எதிரான நமது போராட்டத்தில் ஒரு முன்னேற்றம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க