• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷ் இயக்கும் அடுத்த படம் குறித்து கசிந்த தகவல்கள்

December 14, 2017 தண்டோரா குழு

சௌந்தர்யா ரஜினிகாந்தின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்திற்கு பின் நடிகராக தனுஷ் கைவசம் கெளதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, வெற்றிமாறனின் ‘வடசென்னை’, பாலாஜி மோகனின் ‘மாரி 2’, கென் ஸ்காட்டின் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆஃப் தி ஃபகிர்’ ஹாலிவுட் படம் என அடுத்தடுத்து படங்கள் உள்ளன.

தனுஷ், நடிகர் மட்டுமல்லாது பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்களை எடுத்து அதில் வெற்றி கண்டுள்ளார். இதுமட்டுமின்றி ராஜ்கிரணை வைத்து வித்யாசமான கதையை இயக்கி ‘பவர் பாண்டி’ படத்தை எடுத்து, அதிலும் வெற்றியை அடைந்தார்.
இந்நிலையில், சமீபத்தில், மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க தனுஷ் கமிட்டானார். இப்படத்தை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் சார்பில் முரளி ராமசாமி – ஹேமா ருக்மணி இணைந்து தயாரிக்கவுள்ளனர். தற்போது, இன்னும் பெயரிடப்படாத இந்த
படத்தை தனுஷே இயக்கவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

மேலும், இப்படம் மெகா பட்ஜெட்டில் உருவாகவிருப்பதாகவும் வெகு விரைவில் படத்தின் டைட்டில், நடிக்கவுள்ள ஹீரோயின், இதர நடிகர்கள் – பணியாற்றவுள்ள தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் ப்ளான் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க