• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தி நடிகர் மற்றும் இயக்குநர் நீர்ஜா வோரா காலமானார்

December 14, 2017 தண்டோரா குழு

இந்தி நடிகர் மற்றும் இயக்குநர் நீர்ஜா வோரா இன்று (டிசம்பர் 14) மும்பையில், தனது 54வது வயதில் காலமானார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நீர்ஜா வோரா. இவர் இந்தி நடிகர் மற்றும் இயக்குநனரும் கூட. சில மாதங்களுக்கு முன், அவருக்கு மாரடைப்பு மற்றும் முளை பக்கவாதம் ஏற்பட்டத்தை அடுத்து, மும்பை நகரின் அந்தேரியில் உள்ள க்ரிடிக் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 13 மாதங்களாக கோமாவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று(டிசம்பர் 14) அதிகாலை சுமார் 4 மணியளவில் உயிரிழந்தார்.

அவருடைய உடல் மும்பையில் உள்ள திரு. பிரோஸ் நாடியாவாலாவின் பார்காட் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு, அதன் பிறகு, மும்பையின் Santa Cruz Electric Crematoriumக்கு மதியம் சுமார் 3 மணியளவில் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர்ஜா வோரா ‘Mann’, ‘Holi’, ‘Virasat’ ‘Rangeela’ஆகிய இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘Phir Hera Pheri’, ‘Khiladi 420’ஆகிய திரைப்படங்களின் இயக்குநராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவிற்கு இந்தி நடிகர் பரேஷ் ராவால் தனது ட்விட்டரில்,
’பிர் ஹீரா பெரி’ மற்றும் பல வெற்றி இந்தி திரைப்படங்களின் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் நீர்ஜா வோரா இனி உயிரோடு இல்லை. ஓம் சாந்தி என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க