• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனு ராமசாமி இயக்கத்தில் உதய்நிதி !

December 14, 2017 தண்டோரா குழு

தயாரிப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்துள்ள உதய் நிதி பல்வேறு வெற்றி படங்களில் நடித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘இப்படை வெல்லும்’ சமீபத்தில் வெளியாகிய நிலையில் அவர் தற்போது ‘நிமிர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரியதர்ஷன் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதியுடன் இயக்குனர் மகேந்திரன், சமுத்திரகனி, நமீதா பிரமோத், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், சீனு இயக்கத்தில் உதயநிதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளார். இதை உதயநிதியே தனது டிவிட்டர் பக்கத்தில் சீனு ராமசாமியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தோடு உறுதிபடுத்தியுள்ளார்.

இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். ஷூட்டிங்கை வருகிற ஜனவரி 19-ஆம் தேதி முதல் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே, விஷ்ணு – சீனு ராமசாமி கூட்டணியில் வெளியான ‘நீர்ப்பறவை’ படத்தை தயாரித்தது உதயநிதி ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க