• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினிகாந்தின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் கோவில்களில் வழிபாடு

December 12, 2017 தண்டோரா குழு

கோவையில், தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

தமிழக திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

கோவையில் சலிவன் வீதியில் உள்ள ராகவேந்திரா கோவிலில் சிறப்பு வழிபாடும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.இப்பூஜையில் சிறப்பு விருந்தினராக இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார்.

இதேபோல் கோவை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் கோவை கோனியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடும் பூஜையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

மேலும்,ரசிகர்கள் கூறும்போது ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த புதய தகவல்கள் வந்து கொண்டே இருப்பதாகவும் அவர் எப்போது அரசியலுக்கு வந்தாலும் அவரது பின்னால் நிற்போம் என்றும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க