• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே குக்கர் சின்னம் – டிடிவி தினகரன்

December 7, 2017 தண்டோரா குழு

எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே நாங்கள் பிரஷர் குக்கர் சின்னத்தை தேர்வு செய்ததாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடைப்பெறவுள்ளது.இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் 59 இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது.

இதில், டிடிவி தினகரன் கோரிய தொப்பி, விசில், கிரிக்கெட் பேட் சின்னங்கள் பிறருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால், சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,

எந்த சின்னம் கொடுத்தாலும் நான் போட்டியிடதான் செய்வேன். தாய் மார்களுக்கு விரும்பும் குக்கர் சின்னம் தேர்தல் ஆணையம் எனக்கு ஒதுக்கியுள்ளது. மேலும், எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே நாங்கள் பிரஷர் குக்கர் சின்னத்தை தேர்வு செய்ததாக டிடிவி தினகரன் கூறினார்.

மேலும் படிக்க