• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜயகாந்த் மீதான பிடிவாரண்டை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

December 6, 2017 தண்டோரா குழு

விஜயகாந்துக்கு ஆலந்தூர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்திருந்த பிடிவாரன்ட்டை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

கடந்த 2013 ஆம் ஆண்டு விமான நிலையத்தில் பத்திரிகையாளர் பாலுவை தாக்கியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிச.5ம் தேதி விஜயகாந்த் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இதைனையடுத்து விஜயகாந்த் நேற்று நேரில் ஆஜராகாததால் அவருக்கு விஜயகாந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை இன்று சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், சிகிச்சைக்காக அவர் வெளிநாடு சென்றுள்ளதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க