• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே.நகரில் போட்டியிடும் விஷாலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து

December 4, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகரில் போட்டியிடும் விஷாலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர்21 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிடவுள்ளார். இதையடுத்து இன்று தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லம், சென்னை ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை, ‘மெரினா’ கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதி ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், ஆர்கேநகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் விஷாலுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும்,விஷால் அரசியலில் நுழைவது இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மேலும் படிக்க