• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே. இடைதேர்தலில் விஷால் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

December 2, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் அதிகாரபூர்வமாகஅறிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுக சார்பில் மருதுகனேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சையாக டிடிவி தினகரன், பாஜக சார்பில் நாகராஜன் போட்டியிடவுள்ளனர். இதற்கிடையில் நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், ஆர்.கே.நகரில் போட்டியிடப்போவதாக, நேற்று தகவல் பரவியது. முதலில், இதை விஷால் தரப்பினர் மறுத்தனர்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக நடிகர் விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுமட்டுமின்றி 4ம் தேதி, அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆர்.கே.நகரில் போட்டியிடுவதற்கு, தேவையான அனைத்து தகவல்களையும், விஷால், தன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் திரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க