• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சந்தானத்திற்காக கைகோர்த்த சிம்பு – தனுஷ் !

November 27, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது நாயகனாக பிசியாகி இருக்கிறார் நடிகர் சந்தானம். ‘சர்வர் சுந்தரம்‘ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், சந்தானம் தற்போது ‘சக்க போடுபோடு ராஜா’, ‘ஓடி ஓடி உழைக்கனும்‘, ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் சந்தானத்தை ஹீரோவாக வைத்து இயக்குனர் சேதுராமன் இயக்கிய படம் ‘சக்க போடு போடு ராஜா’. இந்தப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிகை வைபவி சாண்டில்யா நடிக்கிறார். வி.டி.வி. கணேஷ் தயாரித்து வரும் இப்ப்டத்திற்கு சிம்பு முதல் முறையாக இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் விவேக், சம்பத் ராஜ், ஆர்யன், வி.டி.வி. கணேஷ், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். நடிகர் சிம்பு இசையமைக்கும் இப்படத்தில் இருந்து அனிருத் பாடிய ‘கலக்கு மச்சான்’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 6ம் தேதி பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் சந்தானத்திற்கு ஆச்சரியமளிக்கும் வகையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இசையை வெளியிடவுள்ளார். சிம்பு இசையமைத்த பாடல்களை தனுஷ் வெளியிடவுள்ளார் என சிம்பு – தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.

சிம்பு இசையில் யுவன் ஷங்கர் ராஜா, டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் உள்ளிட்டாரும் பாடியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க