• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மன்னித்து விடுங்கள் உங்கள் எதிர்பார்ப்பை வீணடிக்க மாட்டேன் – அதுல்யா

November 6, 2017 தண்டோரா குழு

காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அதுல்யா. இவர் அறிமுக படத்திலேயே பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.

இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்த வெளிவரவிருக்கும் படம் ஏமாலி, இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. இதில், அதுல்யா சில சர்ச்சைகளை சந்தித்தார். அதாவது ஏமாலி டீசரில் அதுல்யா புகைபிடிப்பது, டிரஸ் மாற்றுவது போல் காட்சிகள் இருந்தது. இதனால் ,சில ரசிகர்கள் தங்கள் நட்சத்திரம் இப்படி பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்று ஆதங்கப்பட்டு அவரிடமே கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையில், அந்த இரண்டு காட்சிகளும் எனக்கு தெரியாமல் எடிட்டர் டீசரில் போட்டு விட்டார். கண்டிப்பாக அந்த காட்சிகள் படத்தில் இடம்பெறாது, மேலும் என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் எதிர்பார்ப்பை கண்டிப்பாக வீணடிக்க மாட்டேன் என்று அதுல்யா கூறியுள்ளார்.

மேலும் படிக்க