• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சன்னி லியோனை தொடர்ந்து இந்திய திரையுலகிற்கு அறிமுகமாகும் மற்றொரு ஆபாச நடிகை !

October 31, 2017 தண்டோரா குழு

கனடாவில் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர் சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்த அவரை பாலிவுட் திரையுலகம் அரவணைத்துக் கொண்டது.

அதன்பின் பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.தற்போது தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து வாய்ப்புகள் வருவதால் சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில், சன்னி லியோனை தொடர்ந்து மேலும் ஒரு ஆபாச நடிகை இந்திய திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார். ஆம்! லெபனான் நாட்டை சேர்ந்த வெப்மாடலாக நடித்து வரும் மியா காலிபா தற்போது இந்திய திரையுலகில் வலம் வரவுள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த உமர் லுலு இயக்கிய சுங்கஷ் (Chunkzz) என்ற மலையாள அடல்ட் காமெடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் உமர் விரைவில் தொடங்கவுள்ளாராம். முதல் பாகத்தில் நடித்த ஹனிரோஸ், பாலுவர்கீஸ் நாயகன், நாயகியாக மீண்டும் நடிக்கவுள்ளனர்.

இதுமட்டுமின்றி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஆபாச நடிகை மியா காபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2018 மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தை பிரபல பாலிவுட் நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

லெபனான் நாட்டை சேர்ந்த இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாச நடிகையாக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க