• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமலா பாலின் காரால் அதிர்ச்சியில் உறைந்த புதுச்சேரி இளைஞர்.!

October 30, 2017 tamil.samayam.com

அமலாபாலின் மெர்சிடெஸ் கார், புதுச்சேரியில் இன்ஜினீயரிங் படித்துவரும் இளைஞர் ஒருவரின் பெயரில் பதிவுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

நடிகை அமலாபால், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடெஸ் ‘எஸ்’ ரக காரை சமீபத்தில் வாங்கினார். இந்த ரக காரை, கேரளாவில் பதிவு செய்தால், ரூ. 20 லட்சம் வரி கட்ட வேண்டும் என்பதால் போலி முகவரி மூலம், புதுச்சேரியில் பதிவுசெய்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை அமலாபாலின் கார், புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள புனித தெராசா தெருவைச் சேர்ந்த இன்ஜினீயரிங் படித்துவரும் இளைஞர் ஒருவரின் பெயரில் பதிவுசெய்யப்பட்டிப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞருக்கே தெரியாமல் அவரின் பெயரில் இந்த கார் பதிவுசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம்குறித்து மலையாளச் செய்தி சேனல், புதுச்சேரி இளைஞரின் வீட்டுக்குச் சென்று விசாரித்த போது, அமலாபால் யார் என்றே எங்களுக்குத் தெரியாது’ என்று கூறிய அவர்கள் இந்த தகவலை அறிந்து கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மேலும் படிக்க