• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நரகாசூரன் படப்பிடிப்பில் இணைந்த அரவிந்த் சாமி

October 26, 2017 தண்டோரா குழு

துருவங்கள் 16 படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக நரகாசூரன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கி இருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதில் முதற்கட்ட படப்பிடிப்பில் சந்தீப் கிஷன், ஆத்மிகா கலந்து கொண்டனர். இரண்டாவது மற்றும் கடைசி கட்ட படப்பிடிப்பில் அரவிந்த்சாமி, இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியா சரண் கலந்து கொண்டுள்ளனர்.

அரவிந்த் சாமி நடிப்பில் `சதுரங்க வேட்டை-2′ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, `வணங்காமுடி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் `வணங்காமுடி’ படம் மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் தனது காட்சிகளை முடித்த அரவிந்த் சாமி அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் `நரகாசூரன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ரோன் ஈதன் யோகன் இசையமைத்துள்ளார். படம் வருகிற பிப்ரவரி மாதம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க