• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹீரோவாகிறார் ‘பிக் பாஸ்’ வின்னர் ஆரவ்

October 26, 2017 தண்டோரா குழு

`சைத்தான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆரவ்.அதனைத் தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த அமோக வரவேற்பால் பிரபலமடைந்த ஆரவ், 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டிலேயே தங்கியிருந்து, பிக்பாஸ் டைட்டிலையும் வென்றார். 100 நாட்கள் முடிந்து வெளியே வந்த ஆரவ் தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக கூறியிருந்தார்.

அதன்படி சிம்புவின் சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் ஆரவ் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளதாகவும் அப்படத்தை ‘விஜயபார்கவி என்டர்டெயின்மென்ட்’ தயாரிக்கவுள்ளதாகவும் ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க