• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சங்கமித்ரா படத்தில் ஸ்ருதிஹாசன் கதாபத்திரத்தில் இவர் தான் நடிக்கிறார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

October 21, 2017 தண்டோரா குழு

மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக பட்ஜெடில் சங்கமித்ரா படத்தை தயாரிக்கவுள்ளது. தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாரிப்பில் இருக்கும் படம் ‘சங்கமித்ரா’. கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சுந்தர்.சி இயக்க்கும் இப்படத்தில் ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். கலை இயக்குநராக சாபுசிரில் பணிபுரிந்து வருகிறார். ‘சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள், ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அரங்குகள், கிராபிக்ஸ் காட்சிகள் வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் தற்போது கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

ஆரம்பத்தில் இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யபட்டார். பின்னர் திடீரேனே படத்தில் இருந்து விலகினார். இதனால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, ஹன்சிகா ஆகியோரிடம் படக்குழு பேசி வந்தது.
இதற்கிடையில் ‘மெர்சல்’ தொடர்பான சர்ச்சை பெரிதாக போய் கொண்டிருக்கும் நிலையில், ‘சங்கமித்ரா’ திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து ‘சங்கமித்ரா’ படத்தின் நாயகியாக திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
திஷா பதானி தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க