• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை நமீதாவிற்கும் சரத்பாபுவிற்கும் திருமணமா ?

October 17, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நமீதா. உடல் எடையால் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த நமீதாவுக்கு ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சியது. காரணம் ரசிகர்களிடையே அவ்வளவாக அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், தற்போது நமீதா மூத்த நடிகரான சரதபாபுவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவியது. ஆனால் இதுபற்றி நமீதா எதுவும் வாய் திறக்காமல் உள்ளார். எனினும், நான் நமிதாவுடன் 8 வருடங்களுக்கு முன்பு இணைந்து நடித்த போதில் இருந்தே இப்படியான வதந்தி இருந்து கொண்டே தான் உள்ளது எனவும் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை இவை வெறும் வதந்திகள் தான் என்றும் நடிகர் சரத்பாபு கூறியுள்ளார்.

மேலும், நான் நமீதாவை பார்த்தே இரண்டு வருடங்கள் ஆகின்றது. இனிமேலும் அவருடன் என்னை இணைத்து பேசுவது இருவரையும் பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க