• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவாவில் நாளை சமந்தா – நாக சைதன்யா திருமணம் !

October 5, 2017 தண்டோரா குழு

நடிகை சமந்தா – நாக சைதன்யாவுக்கு கோவாவில் நாளை திருமணம் நடைபெற இருக்கிறது. திருமண விழாவில் பங்கேற்க அவர்களது உறவினர்கள் 183 பேர் தனி விமானத்தில் கோவா சென்றனர்.

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.நாகார்ஜூனாவின் மகனான நாகசைதன்யா நடிகை சமந்தாவும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதில் தீவிரமாக இருந்தனர்.

இதையடுத்து, இரு குடும்பத்தினரும் இந்த திருமணத்துக்கு ஒப்புக் கொண்டதையடுத்து இந்து, கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணத்தை கோவாவில் நடத்துவது என்றும், அதில் இரண்டு குடும்பத்தினர் மட்டும் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.இதற்காக கடந்த ஒருவாரமாக கோவாவில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருமணத்தையொட்டி, சமந்தா, நாகசைதன்யா இருவரும் 3 நாட்களுக்கு முன்பே கோவா சென்று விட்டனர்.நாளை
(6-ந்தேதி) இந்து முறைப்படி சமந்தா – நாக சைதன்யா திருமணம் நடக்கிறது. நாளை மறுநாள் (7-ந்தேதி) கிறிஸ்தவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க