• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘ஆளப்போறான் தமிழன்’ ஆக மாறும் ‘மெர்சல்’ தலைப்பு?!

September 26, 2017 tamilsamayam.com

விஜய் நடித்த ‘மெர்சல்’ ‘படம் ஆளப்போறான் தமிழன்’ என்ற பெயரில் மாற்றப்படவுள்ளதாக தெரிகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘மெர்சல்’ படத்தின் தலைப்பு தற்போது மாற்றப்படலாம் என தெரிகிறது. ‘மெர்சல்’ படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு வழக்கை தொடர்ந்தார். 2014ம் ஆண்டு ‘ மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை பதிவு செய்திருந்தேன். ஆனால், ‘மெர்சல்’ என்ற தலைப்பை விஜய் படத்திற்கு வைத்துள்ளனர். எனவே, அந்த தலைப்பில் விளம்பரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் மனுவை விசாரித்த நீதிபதி ‘மெர்சல்’ என்ற தலைப்பை வருகிற அக்டோபர் 3ம் தேதி வரை விளம்பரத்திற்காக பயன்படுத்தக்கூடாது என தடை விதித்தார். மேலும், இதுகுறித்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் தரவேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ‘மெர்சல்’ தலைப்பிற்கு நீதிமன்றம் தடை விதித்தால், ‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற பாடல் வரியையே தலைப்பாக வைத்துவிடலாம் எனப் படக்குழு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

மேலும் படிக்க