• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்க மாணவிகள் மீது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஆசிட் வீச்சு

September 18, 2017 தண்டோரா குழு

வாஷிங்டன்

அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா மேற்கொண்ட நான்கு கல்லூரி மாணவிகள் மீது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா பாஸ்டன் கல்லூரியை சேர்ந்த நான்கு பெண்கள் பிரான்ஸ் நாட்டிற்கு கடந்த ஞாயிற்றுகிழமை சுற்றுலா சென்றனர். தெற்கு பிரான்ஸின் மெர்சிலி ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு பெண், தான் வைத்திருந்த ஆசிடை அந்த நான்கு பேர் மீது வீசியுள்ளார்.

இதில், இரண்டு மாணவிகள் முகத்தில் ஆசிட் பட்டது மற்ற இரண்டு மாணவிகள் முகத்தில் ஆசிட் படவில்லை. ஆனால், அவர்கள் உடல் பகுதியில் ஆசிட் பட்டது. அந்த நான்கு பேரையும், ரயில்வே காவல்துறையினர் மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனிடையே, அந்த மாணவிகள் மீது ஆசிட் வீசிய 41 வயது பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது. அந்த மாணவிகள் மீது ஏன் அவர் ஆசிட் வீசினார் என்பதற்கான காரணம் தெரியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க