• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘மெர்சல்’ படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

September 16, 2017 தண்டோரா குழு

தெரி படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் ‘மெர்சல்.தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்க்கும் இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், வடிவேலு, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தின் பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து டீஸர் எப்போது வெளியீடு என்பதை தேனாண்டாள் பிலிம்ஸ் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (செப்டம்பர் 16) மாலை 6 மணிக்கு அறிவிப்பார் என்று படக்குழு தெரிவித்தது.

அதன்படி, “செப்டம்பர் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு ‘மெர்சல்’ டீஸர் வெளியீடு” என்று ஹேமா ருக்மணி அறிவித்துள்ளார். இதன் மூலம், பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘மெர்சல்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழு துவங்கியுள்ளது.

மேலும் படிக்க